FLASH | அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி..!! இரவோடு இரவாக நடந்த சந்திப்பு..!! குஷியில் இபிஎஸ்..!!

Admk 2026

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் ‘தென்னாட்டு மக்கள் கட்சி’ இணைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தென்னாட்டு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ். கணேஷ் தேவர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தென் மாவட்டங்களின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வரும் தேர்தல்களில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


தென் தமிழகத்தில் கணிசமான செல்வாக்கு கொண்டுள்ள கணேஷ் தேவர், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட போவதாக அறிவித்துள்ளார். குறிப்பாக, தென் மாவட்டங்களில் கட்சியின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஒருங்கிணைந்து முன்னெடுப்பது குறித்து இரு கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

Read More : தாவரங்கள் சுவாசிப்பதை முதன்முறையாக காண முடியும்..! இந்த கண்டுபிடிப்பு ஏன் முக்கியமானது?

CHELLA

Next Post

நடுத்தர மக்களுக்கு கனவாகவே போகும் தங்கம்..!! நகை வாங்குவோருக்கு இன்று காத்திருக்கும் பேரதிர்ச்சி..!!

Fri Jan 23 , 2026
சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையிறக்கம் முடிவுக்கு வந்து, ஒரே நாளில் முதலீட்டாளர்களை மலைக்க வைக்கும் வகையில் விலையேற்றம் அரங்கேறியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) விலையில் $118.55 வரை உயர்ந்து, தற்போது $4,953.03 என்ற நிலையை எட்டியுள்ளது. தங்கத்தை […]
gold necklace from collection jewellery by person 1262466 1103

You May Like