ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக நீதி, பாசிசத்திற்கு எதிரான பார்வை, மற்றும் எழுச்சியூட்டும் அரசியல் பேச்சுகள் மூலம் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்திருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம், பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களிடமும், பொதுமக்களிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் மீது “குண்டர் சட்டம்” பதிவு செய்யப்பட்ட நிலையில், 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சகோதரர் கினோஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் அளித்த உத்தரவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றப்பத்திரிக்கையை சிபிஐ 6 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அரசியல் மற்றும் ஊடக தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தவும், உடனடியாக ஆவணங்களை வழங்கவும் உத்தரவிட்டது.
Read more: திமுக எதிர்ப்பு என்ற பெயரில் விஜய் வெறுப்பு அரசியல் செய்கிறார்.. திருமாவளவன் சாடல்..