Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு..! இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? நிலவரம் இதோ..!

gold jewelery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.15,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,25,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு உயர்ந்து ரூ.3.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : “விஜய்க்கு அனுபவம் இல்லை.. பல குறைகள் இருக்கு”..!! தவெக கூட்டத்தில் பரபரப்பை கிளப்பிய நாஞ்சில் சம்பத்..!!

RUPA

Next Post

Breaking : அடுத்த ஜாக்பாட்..! முதியோருக்கு ரூ.3200.. மாற்று திறனாளிகளுக்கு ரூ.4,000 வரவு வைப்பு..! CM ஸ்டாலின் அதிரடி..!

Tue Mar 3 , 2026
மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 13-ம் தேதி அறிவித்தார்.. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்… மேலும் திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.. முதல்வரின் இந்த […]
cm stalin new

You May Like