Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு..! தொடர்ந்து 3-வது நாளாக சரிவு..! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

jewels nn

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று 3-வது நாளாக ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,00,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.258க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.2,58,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. இந்த செயலியில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு 3 முதல் 6% வரை தள்ளுபடி..!

RUPA

Next Post

இந்த நோய்கள் இருந்தால், சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடாதீர்கள்.. மீறினால் பிரச்சனை தான்..!

Wed Dec 31 , 2025
If you have these diseases, don't eat sugar beet tubers.. If you do, it's a problem..!
sweet potato 1

You May Like