Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. தங்கம் விலை மீண்டும் குறைவு.. இன்றைய நிலவரம் இதோ..!

gold jewlery

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. ஆனால் இந்த வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை, நேற்று சரிந்தது…

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. அதன்படி நேற்று ரூ.2,400 உயர்ந்தது.

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.. இன்று அதன்படி இன்று காலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.60 குறைந்து ரூ.11,840க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ.94,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று காலை சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.180க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : ரூ. 15,499க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! 30 கிமீ மைலேஜ்; ஒரு கிமீக்கு 20 பைசா மட்டுமே செலவாகும்..!

RUPA

Next Post

ஓட்ஸ் எடையை குறைக்கும்.. ஆனால் முறையாக சாப்பிடலனா எடை அதிகரித்துவிடுமாம்..! எடை குறைய எப்படி சாப்பிட வேண்டும்..?

Fri Nov 14 , 2025
Does eating oats help you lose weight? How to eat it?
oats 2

You May Like