சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.94,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது..
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. நேற்று ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்தது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை தங்கம் விலை ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.11,800க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.94,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து, ரூ.176க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,76,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Read More : Breaking : உருவானது சென்யார் புயல்..! தமிழகத்திற்கு பாதிப்பா? வானிலை மையம் முக்கிய தகவல்!



