Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. இன்று தங்கம் விலை சற்று உயர்வு.. வெள்ளி விலை நிலவரம் என்ன?

gold jewelery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.. அதன்படி, இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.1,16,800-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இன்று வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : இனி பிஎஃப் பணத்தை ஈசியா எடுக்கலாம்..!! புதிய செயலியை அறிமுகம் செய்யும் மத்திய அரசு..!!

RUPA

Next Post

2027 ஆம் ஆண்டுக்குள் 99% வேலைகள் மறைந்து போகலாம், இந்த 5 வேலைகள் மட்டுமே இருக்கும்: AI நிபுணர் ஷாக் தகவல்..!

Wed Feb 11 , 2026
Artificial Intelligence – AI, அதாவது செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக நடைபெறும் முன்னேற்றங்கள், மனிதர்களின் வேலைவாய்ப்பை எதிர்பார்த்ததை விட மிக விரைவாக மாற்றிவிடக்கூடும் என எச்சரித்துள்ளார் முன்னணி AI நிபுணர் டாக்டர் ரோமன் யாம்போல்ஸ்கி. அவரின் இந்த கருத்து உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.. லாட்வியாவில் பிறந்து, அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக பணியாற்றி வரும் அவர், Artificial General Intelligence (AGI) என்ற மனிதரைப் […]
AI jobs 2026

You May Like