Flash: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய தீர்ப்பு..!!

dc Cover 4ue75ephnt382p47rlain39m41 20160218071059.Medi

மதுரையில், திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர் கந்தூரி விழா நடத்துவதை எதிர்த்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேவேளை சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு மற்றும் கோழியுடன் செல்வதற்குத் தடையையும் காவல்துறை விதித்தது.


இதையடுத்து, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கண்ணன், முத்துகுமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன.

இந்த கோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்பட்டது சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி நிஷா பானு மனுக்களில் எதிலும் தலையீடு தேவை இல்லை என கூறி அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கிறார். ஆனால், நீதிபதி ஸ்ரீமதி இந்த வழக்கில் தீர்வளிக்க மேலதிக ஆய்வு தேவைப்படுவதால், அதை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது.

இதனால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக தனி நீதிபதி தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தினார். இறுதியாக, தனி நீதிபதி ஆர்.விஜயகுமார் வழங்கிய தீர்ப்பில், ஆடு, கோழி பலியிட தடை விதித்து, இது குறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.

மேலும், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார். இந்த தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால பிரச்சனைகளுக்கு ஒரு முடிவை எட்டியுள்ளன.

Read more: Breaking : கரூர் துயரம்.. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்! தீர்ப்பு ஒத்திவைப்பு..

English Summary

Flash: Ban on sacrificing goats and chickens on Thiruparankundram hill.. Important order of the High Court..!!

Next Post

Vastu: வீட்டின் இந்த திசையில் லட்சுமி தேவியின் புகைப்படத்தை வைத்தால் பணம் கொட்டும்..!! 

Fri Oct 10 , 2025
Vastu: If you place a photo of Goddess Lakshmi in this direction of the house, money will flow in..!!
Goddess Lakshmi 11zon

You May Like