Flash : பீகாரில் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க தயாராகும் பாஜக கூட்டணி.. இந்தியா கூட்டணியின் நிலை என்ன?

modi nithis tejaswi bihar 1

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கான ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 66.91 சதவீதமாக இருந்தது, இது இதுவரை இல்லாத அளவுக்கு பதிவான அதிக சதவீதமாகும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது, 65.08 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. நவம்பர் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்துள்ளது, வாக்குப்பதிவு 68.67 சதவீதமாக உள்ளது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறும் என்று கணிந்திருந்தன..

இந்த நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நெருக்கமான போட்டியாக இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது.. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சற்று பின் தங்கியது.

காலை 11 மணி நிலவரம்

பாஜக கூட்டணி : 192 இடங்களில் முன்னிலை

காங். கூட்டணி : 47 இடங்களில் முன்னிலை

ஜன் சுராஜ் : 0

243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. பீகாரில் ஆளும் NDA கூட்டணி அமோக வெற்றி பெறும் நிலையில் உள்ளது, கூட்டணி 192 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. இதன் மூலம் பாஜக கூட்டணி பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்க தயாராகி வருகிறது.. மறுபுறம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 50 தொகுதிகளை நெருங்கவே போராடி வருகிறது..

RUPA

Next Post

பீகார் தேர்தல்..!! பிரசாந்த் கிஷோருக்கே இந்த நிலைமையா..? விஜய்க்கு அடித்த எச்சரிக்கை மணி..!!

Fri Nov 14 , 2025
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்தியா முழுவதும் அரசியலில் புதிதாக களமிறங்கும் கட்சிகளுக்கு, குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கை செய்தியை வழங்கியுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த தேர்தல் வியூக நிபுணராக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கிய அவரது ஜன சுராஜ் கட்சி (ஜே.எஸ்.பி.) அடைந்துள்ள பின்னடைவு, தமிழகத்தின் புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குப் பெரும் பாடமாக அமையும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். […]
Vijay Prasanth Kishore 2025

You May Like