Flash : நடிகர் ரஜினி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. லிஸ்டில் பல பிரபலங்கள்.. போலீசார் குவிந்ததால் பரபரப்பு..!

rajinikanth house

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.


மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

கடந்த வாரம் சென்னையில் உள்ள நடிகர் விஷால், நடிகை த்ரிஷா, இயக்குனர் மணிரத்னம் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனினும் அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த சூழலில் நேற்று மீண்டும் த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனையில் அது புரளி என்பது உறுதியானது.

இந்த நிலையில் நடிகர் சென்னை போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் பல பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், பிரியா பவானி சங்கர், சாக்‌ஷி அகர்வால் வீட்டிற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.. பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது..

இதை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். எனினும் இந்த சோதனையில் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது..

Read More : பொது இடத்தில் ராஷ்மிகாவுக்கு முத்தம் கொடுத்த விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் வீடியோ!

RUPA

Next Post

குளிர்காலத்தில் சூடான நீரில் குளிப்பவரா நீங்கள்? இந்த ஆபத்துகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!

Thu Nov 13 , 2025
குளிர்காலம் வந்துவிட்டது… நம் வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும். நம் உணவில் இருந்து அன்றாட வழக்கங்கள் வரை அனைத்தும் மாறுகின்றன. குறிப்பாக காலையில் எழுந்தவுடன், சூடான தேநீர் மற்றும் சூடான குளியல் குடிக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது. குளிரில் இருந்து விடுபடவும், சோர்வைப் போக்கவும் சூடான நீர் சிறந்த வழி என்று தோன்றுகிறது. இருப்பினும், குளிரில் வசதியாக இருப்பதாகச் சொல்லி, குளிக்கக்கூட அதிக சூடான நீரைப் […]
Bathing Problem 1

You May Like