Flash : நடிகை த்ரிஷா வீட்டிற்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் குவிந்ததால் பரபரப்பு!

trisha

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.


மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

கடந்த வாரம் சென்னையில் உள்ள நடிகர் விஷால், நடிகை த்ரிஷா, இயக்குனர் மணிரத்னம் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனினும் அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகை த்ரிஷா வீட்டிற்கு 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது.. இதையடுத்து மோப்ப நாய்கள் உதவி உடன் த்ரிஷா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.. இதனால் அப்பகுதி முழுவடும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது..

அண்மை காலமாக சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த மர்ம நபரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. எனினும் சம்மந்தப்பட்ட நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்..

Read More : 3 வயது சிறுவனின் உயிரை பறித்த பலூன்.. கதறி அழுத தாய்..! பெரும் சோகம்..

RUPA

Next Post

500 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகும் மாற்றம்..!! குரு, சனியால் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை..!!

Mon Nov 10 , 2025
ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றியமைக்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நவம்பர் மாதத்தில் சுக்கிரன், குரு மற்றும் சனிபகவான் போன்ற சக்திவாய்ந்த கிரகங்கள் நிலை மாறுவது சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் தரவுள்ளது. குறிப்பாக, நவம்பர் 11 ஆம் தேதி, குருபகவான் கடகத்தில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். அதைத் தொடர்ந்து, […]
Astro Sani Bhagavan 2025

You May Like