Flash : காங். தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர சோதனை..

selvaperunthagai

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.


மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

அந்த வகையில் நேற்று மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. 2 வாரங்களில் நேற்று 2-வது முறை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவரின் வீட்டின் முன்பு போலீசார் குவிந்ததால் பரபரப்பு நிலவியது..

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. அவர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை அடுத்து போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் உதவி உடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. இந்த சோதனையின் முடிவில் செல்வப்பெருந்தகை வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது..

Read More : Flash : அடுத்த 3 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கும்.. இந்த 11 மாவட்ட மக்கள் வெளியே வராதீங்க..!

RUPA

Next Post

ஜிம்முக்கு போக கஷ்டமா இருக்கா..? இந்த உணவுகளை சாப்பிட்டே உடல் எடையை ஈசியா குறைக்கலாம்..!!

Tue Oct 28 , 2025
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலும் ஜிம் செல்வதையே தீர்வாக கருதுகின்றனர். ஆனால், நம் சமையலறையில் தொடங்கும் சிறிய உணவு மாற்றங்களே பெரிய பலன்களைத் தரும் என்கிறார் உதிதா அகர்வால். இவர் ஜிம் செல்லாமலேயே 8 மாதங்களில் சுமார் 30 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ளார். இவரது கூற்றுப்படி, பதப்படுத்தப்படாத முழு உணவுகளான காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளில் கவனம் செலுத்துவதே எடை இழப்புக்கு முக்கியம். […]
Gym 11zon

You May Like