Flash : அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர சோதனை..!

bomb threat nn

அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.


மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அந்த வகையில் நேற்று இசையமைப்பாளர் இளையராஜா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.. பெரும்பாலும் இமெயில் மூலம் விடுக்கப்படும் இந்த மிரட்டல்களை தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடங்களில் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. சோதனையின் முடிவில் அவை வெறும் புரளி என்பது உறுதியாகி வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் காட்பாடி, காந்தி நகரில் உள்ள அவரின் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.. இ மெயில் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் சோதனை நடந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..

Read More : “ரிதன்யாவுக்கு திருமணத்தில் விருப்பமே இல்லை..!” ஆதாரத்துடன் நீதிமன்றம் சென்ற கணவன்.. வரதட்சணை கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்..!!

RUPA

Next Post

திடீரென முடங்கிய ஜியோ ஹாட்ஸ்டார்; ஸ்ட்ரீமிங் ஆகாததால் பயனர்கள் அதிருப்தி! நிறுவனம் விளக்கம்!

Wed Oct 15 , 2025
இந்தியா முழுவதும் உள்ள பல பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் தற்போது செயலிழந்துவிட்டதாகவும், இதனால் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி நிகழ்வுகள் ஸ்ட்ரீமிங் செய்வதில் இடையூறுகள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். ஜியோ தளம் அணுக முடியாததால் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பல பயனர்கள் செயலியைத் திறக்க முயற்சிக்கும்போது, ​​அது “Network Error” செய்தியைக் காண்பிப்பதாக தெரிவிக்கின்றனர். அந்த செய்தியில் ”ஜியோஹாட்ஸ்டார் உடன் இணைக்க முடியவில்லை. உங்கள் […]
jio hotstar jpg 1 1

You May Like