சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போன் செய்துள்ளார். உடனே இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு சென்ற போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் இன்று அதிகாலையில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வீடு முழுவது நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் நீலாங்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏற்கனவே கரூர் துயர சம்பவத்திற்கு பிறகும் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: இட்லி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துறீங்களா..? ஆரோக்கியத்திற்கு நல்லதா..? இல்லத்தரசிகளே இதை படிங்க..!!