சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது..
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்கு சோதனை நடத்தப்பட்டது.. அதே போல் வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது..
பெரும்பாலும் இமெயில் மூலம் விடுக்கப்படும் இந்த மிரட்டல்களை தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடங்களில் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. சோதனையின் முடிவில் அவை வெறும் புரளி என்பது உறுதியாகி வருகிறது.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் பின்னி சாலையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் காவல்துறையினர் சிபி ராதாகிருஷ்ணன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.. மேலும் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இதனிடையே சென்னை ஆர்.ஏ புரத்தி உள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வீட்டுக்கு 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதையடுத்து போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : “கரூர் மக்களிடம் மறக்காமல் இதை சொல்லுங்கள்”..!! மாவட்ட செயலாளரிடம் விஜய் சொன்ன அந்த வார்த்தை..!!



