#Flash : தமிழிசை மீது வழக்குப்பதிவு.. உயர்நீதிமன்ற உத்தரவை மீறியதால் காவல்துறை நடவடிக்கை..

Tamilisai

சென்னை மாநகராட்சியின் 5,6 மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 1-ம் தேதி இந்த போராட்டம் தொடங்கிய நிலையில், 13 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.. இந்த போராட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.. மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்..


ஆனால் தனியார் நிறுவன பணியில், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இருப்பதாகவும், தூய்மை பணியாளர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தது..

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள் சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்.. சட்டத்திற்கு உட்பட்டு அனைவரையும் அப்புறப்படுத்துங்கள்.. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.” என்று உத்தரவிட்டனர்..

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.. எனவே போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்..

இந்த நிலையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. உயர்நீதிமன்ற உத்தரவை மீறியதால் தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது..

RUPA

Next Post

ஆமிர் கானை விட 10 மடங்கு அதிக சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த்! கூலி பட நடிகர்கள் வாங்கிய சம்பள விவரம் இதோ..

Wed Aug 13 , 2025
ரஜினிகாந்தின் 171வது படமாக கூலி படம் உருவாகி உள்ளது.. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. மேலும் பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு […]
Coolie rajini

You May Like