Flash : சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்..! தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Untitled design 5 6 jpg 1

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது.


ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று தான் செயல்பட முடியும்.. தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த காபந்து அரசாக செயல்படும்.

அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.. மேலும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றி சாய்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டுள்ளார்.. அவருக்கு பதில் சென்னை காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. சென்னை காவல் ஆணையராக அபின் திணேஷ் மோதக் நாளை காலை பதவியேற்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது..

2024 ஜூலை மாதம் முதல் சென்னை காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அருண் பணியாற்றி வருகிறார்.. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின் சென்னை காவல் ஆணையராக கொண்டு வரப்பட்டவர் அருண் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : கொளத்தூர் முதல் திருச்சி கிழக்கு வரை.. தமிழக தேர்தலை கவனம் ஈர்க்கும் 5 முக்கிய தொகுதிகள்..!

RUPA

You May Like