Flash : 28-ம் தேதி முதல் விஜய் தேர்தல் பிரச்சாரம்.. எந்த தொகுதியில் தொடங்குகிறார்..?

vijay 2

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது.. விரைவில் தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..


ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விஜய் அதனை மறுத்திருந்தார்.. மேலும் தவெக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்றும் மதசார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது என்றும் விஜய் கூறியிருந்தார்.. மகளிர் தினத்தில் தாலிக்கு தங்கம், மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளையும் விஜய் அறிவித்தார்.. விரைவில் தவெகவின் முழு தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை விஜய் பெரம்பூர் தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.. விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு தலைமை தேர்தல் அதிகாரியிடம் செங்கோட்டையன் மனு அளித்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் பெரம்பூரில் இருந்தே விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். வரும் 28-ம் தேதி அவர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது..

Read More : திமுகவில் 4 அதிகார மையங்கள் உள்ளன.. 150% வரியை உயர்த்திய இந்த கொடுங்கோல் ஆட்சி தேவையா? இபிஎஸ் பிரச்சாரம்..!

RUPA

Next Post

அமெரிக்கா கடும் விலை கொடுக்க நேரிடும்.. ஈரான் பகிரங்க எச்சரிக்கை..! டிரம்பின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் மறுப்பு..!

Wed Mar 25 , 2026
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் நடந்து வரும் போருக்கு மத்தியில், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை நிலைநிறுத்துவதாகக் கூறப்படுவது குறித்து ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஈரான் பிராந்திய நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இஸ்ரேலின் ‘மாயைக்கு’ அமெரிக்கா விலை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். அமெரிக்கா மத்திய கிழக்குக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களை […]
iran 2 1

You May Like