Flash : காலையில் சரிவு.. மாலையில் ரூ.1,800 உயர்வு.. ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்!

Jewellery 1

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் சுமார் ரூ.4000 வரை விலை குறைந்தது.. அதே போல் நேற்று முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.2000 உயர்ந்தது..

சென்னையில் இன்று காலை மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைந்தது.. ஆனால் இன்று மாலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ. 11,300க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.90,400-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று காலை குறைந்த நிலையில் மாலையில் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

எனினும் இன்று மாலை நிலவரப்படி வெள்ளி விலையில் மாற்றமில்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா..? இனி எங்கும் அலைய வேண்டாம்.. டக்குனு வேலை முடியும்..!!

RUPA

Next Post

“கல்வித்துறையில் பின்தங்கிய தமிழகம்.. முதல்வரும், அமைச்சரும் எப்போது விழித்துக் கொள்வார்கள்..?” அண்ணாமலை கேள்வி..

Thu Oct 30 , 2025
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் UDISE+ அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. 2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுபோல, […]
67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

You May Like