டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 350 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.. இந்த புயல் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம் – புதுவை – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்..
இந்த புயல் காரணமாக, நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காரைக்கால், புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, தி.மலை, விழுப்புரம், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, கன்னியாகுமரி, பெரம்பலூர், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சி, திருப்பூர், வேலூர் மற்றும் புதுவை, காரைக்காலில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : டிட்வா புயல் எப்போது வலுவிழக்கும்? கரையை கடக்காதா? வானிலை மையம் முக்கிய அப்டேட்!



