Flash : காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம்.. இன்று மீண்டும் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Jewellery 1

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் நேற்று ஒரு சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது..

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ரூ.100 உயர்ந்து, ரூ.11,500க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ. 92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.173க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,73,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : அடிதூள்.. வெறும் 9 ரூபாய்க்கு 2ஜிபி டேட்டா + அன்லிமிடெட் கால்ஸ்.. BSNL வாடிக்கையாளர்களுக்கு டபுள் ஜாக்பாட்..!

RUPA

Next Post

நாடு முழுவதும் இ-பாஸ்போர்ட் அறிமுகம்: பழைய பாஸ்போர்ட்க்கும் இவற்றுக்கும் என்ன வித்தியாசம்?

Wed Nov 19 , 2025
வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் பாஸ்போர்ட் பாதுகாப்பு தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக இ-பாஸ்போர்ட்கள் (e-Passport) வழங்கும் முறையை நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.. 2025 மே 28-ம் தேதி அல்லது அதன் பிறகு புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களும், பாஸ்போர்ட் புதுப்பித்தவர்களும் இனி இ-பாஸ்போர்ட் பெறுவார்கள் இது பாரம்பரிய பாஸ்போர்ட்டை விட பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு டிஜிட்டல் பாஸ்போர்ட். பாஸ்போர்ட்டில் ஒரு எலக்ட்ரானிக் சிப் இருக்கும். அதில் உங்கள் தனிப்பட்ட […]
e passport

You May Like