Flash : மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை..! வெள்ளி விலையும் ரூ.5000 உயர்வு..!

1730197140 4512 2 1

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ரூ.1,15,360-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து, ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2.85 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : OTP மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும்..! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

RUPA

Next Post

18% வரி, 500 பில்லியன் டாலர் முதலீடு..! இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்.. முக்கிய அம்சங்கள் இதோ..!

Sat Feb 7 , 2026
இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருந்த சுங்க வரிகள் குறைக்கப்பட்டு, இறுதி விரி விகிதம் 18 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பு விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பகிர்ந்துள்ளார். இந்தியா–அமெரிக்கா உறவுகளில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியப் […]
Modi Trump 2026

You May Like