Flash : இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை..! 3 மணி நேரத்தில் மீண்டும் விலை உயர்ந்ததால் பேரதிர்ச்சி..!

jewels nn

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி இன்று காலை சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்தது.. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.. வெறும் 3 மணி நேரத்தில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது..

இன்று மதிய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.165 உயர்ந்து ரூ. ரூ.14,415க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் இன்று காலை சவரனுக்கு ரூ.2800 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.1300 உயர்ந்து, ரூ.1,15,320க்கு ற்பனை செய்யப்படுகிறது.. இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை மாற்றமின்றி இருந்த வெள்ளி விலை மதியத்தில் ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.345க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.3.45 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்..! புதிய சுங்கக் கட்டண விதிகள் அமல்.. கட்டணம் செலுத்தவில்லை எனில் அபராதம்..!

RUPA

Next Post

ஆரம்ப சம்பளம் ரூ.57,000 ! எழுத்துத் தேர்வு இல்லை..! இந்திய ராணுவத்தில் வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க..!

Wed Jan 21 , 2026
எழுத்துத் தேர்வு இல்லாமல் இந்திய ராணுவத்தில் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால், இது நீங்கள் தவறவிடக்கூடாத ஒரு வாய்ப்பு. இந்திய ராணுவம் தொழில்நுட்பப் பதவிகளுக்கான இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு 2026-ஐ அறிவித்துள்ளது. இதில், பயிற்சி காலத்தில் மாதம் ரூ.56,100 முதல் ரூ.57,000 வரை தொடக்க உதவித்தொகையும், பணி நியமனத்திற்குப் பிறகு ஈர்க்கக்கூடிய வருடாந்திர சம்பளத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. தேர்வு செயல்முறை நேர்காணல் அடிப்படையிலானது, இது பாதுகாப்புத் துறையில் நேரடியாகப் பணியில் […]
indian army latest recruitment 202

You May Like