Flash : குட்நியூஸ்..! இன்று வெள்ளி விலை ரூ.20,000 சரிவு..! ஆனால் தங்கம் விலை மீண்டும் உயர்வு..!

360 F 612420676 Az3c9EUa7JNa5ShgNII8DGt4XNEOtqv4 1

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று காலை சென்னையில் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030க்கு விற்பனையாகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது… அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.2.80 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! அமலுக்கு வரும் புதிய சம்பள உயர்வு..!! இனி பண மழை தான்..!!

RUPA

Next Post

தங்கம் வாங்க உங்களிடம் பணம் இல்லையா..? இந்த திட்டங்களில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நீங்கள் நிறைய தங்கம் வாங்கலாம்..!

Tue Feb 3 , 2026
இன்றைய சந்தையில் பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. அவற்றில், நிலையான வைப்புத்தொகைகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் தங்கம் ஆகியவை மிகவும் பிரபலமாகிவிட்டன. இருப்பினும், ஒவ்வொரு வகை முதலீட்டு விருப்பத்தையும் பொறுத்து நன்மைகளும் தீமைகளும் உள்ளன. நிதி இலக்கு மற்றும் முதலீட்டுக் காலத்தின் அடிப்படையில் இவை பரிந்துரைக்கப்படுகின்றன. நீண்ட கால முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு, தங்கமும் ஈக்விட்டியும் சரியானவை. இருப்பினும், இவற்றில் எது சிறந்தது என்பதில் ஒரு குழப்பம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு […]
money 2

You May Like