Flash : காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா? மக்களின் மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கல..

jewels nn

இன்று காலை சவரனுக்கு ரூ.2400 குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.92,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. ஓரிரு நாட்கள் மட்டுமே விலை குறைந்தது..

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்தததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.. ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.. இன்று காலை அதிரடியாக குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்ந்தது..

அதன்படி இன்று மாலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.12,000-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.96,000-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை காலை குறைந்த நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Read More : ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. இனி ஆண்டுக்கு இரு முறை மட்டுமே… தமிழக அரசு புதிய திட்டம்..

English Summary

The public has been shocked as the price of gold, which fell by Rs. 2,400 per sovereign this morning, has risen again in the evening.

RUPA

Next Post

1 மாதம் முன்னதாகவே ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்..!

Sat Oct 18 , 2025
The Tamil Nadu government has announced that after the Diwali holidays, November ration items can be purchased this month itself.
ration cad

You May Like