Flash : குட்நியூஸ்..! தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. ஆனால் வெள்ளி விலை ரூ.4,000 உயர்வு..!

Gold prices

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்றூம் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.4 உயர்ந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.4,000 உயர்ந்து வெள்ளி ரூ. 2.80 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : நீங்க பணம் செலுத்த UPI யூஸ் பண்றீங்களா..? இந்த அம்சங்கள் பற்றி தெரியலன்னா.. உங்களுக்கு தான் லாஸ்..!

RUPA

Next Post

400 பேரை காவு வாங்கிய கொடூர தாக்குதல்..! ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதல்.. என்ன நடக்கிறது..?

Tue Mar 17 , 2026
காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது. இதில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாகவும், கடந்த மூன்று வாரங்களாக நடந்து வரும் மோதல் அதிகரித்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. இரு தரப்பினரும் தங்கள் பகிரப்பட்ட எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஆப்கானிஸ்தானில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் […]
AFGHANISTAN PAKISTAN CONFLICT

You May Like