Flash : தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. டஃப் கொடுக்கும் வெள்ளி..! இன்றைய நிலவரம் என்ன?

jewel n

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.355க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3.55 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. தங்கம், விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : வெள்ளிக்கு வரப்போகுது யோகம்..!! 200 டாலரை தொடும்..!! Rich Dad Poor Dad ஆசிரியர் ராபர்ட் கியோசாகி புதிய கணிப்பு..!!

RUPA

Next Post

திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? முடிவை அறிவிப்பதில் ஏன் தாமதம்? பிரேமலதா விளக்கம்..!

Sat Jan 24 , 2026
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]
stalin premalatha

You May Like