ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, இன்று காலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,850க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,10,800க்கும் விற்பனையாகிறது.. நேற்று ஒரே நாளில் ரூ.2400 தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்…
எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ. 2.55 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
Read More : விமானங்களில் இனி இலவச சீட் இல்லை..! 60 சதவீத இருக்கை விதியை நிறுத்திவைத்த மத்திய அரசு..!



