Flash: காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..!

gold price prediction

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.. ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,08,800க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலை குறைந்த நிலையில், மாலையில் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை எந்த திசையில் செல்லும் என்பதே தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். வெள்ளியின் விலையும் இதேபோல் காலையில் குறைந்து மாலையில் உயர்ந்துள்ளது.

அதன்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1360க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more: அமைதியாய் உடலை சிதைக்கும் வெயில்.. தப்பிக்க என்ன செய்யலாம்..? மருத்துவர் கூறும் தீர்வு!

English Summary

Flash: Gold prices fell in the morning and rose in the evening.. Jewelers are shocked..!

Next Post

Flash: வில்லிவாக்கத்தில் விஜய் பிரச்சாரம் ரத்து? ஆதவ் தொகுதிக்கு செல்லாதது ஏன்..?

Mon Mar 30 , 2026
It has been reported that the campaign of Vijay, which was scheduled to be held in Villivakkam, Chennai, has been canceled.
aadhav arjuna 01 jpg 1733584557993 1733584558640 1200x675 1

You May Like