Flash : தங்கம் விலையில் தடாலடி மாற்றம்.. வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ..

jewels nn

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.320 உயர்ந்து, ரூ.96,320 செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதன்படி கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.. இந்த வார தொடக்கத்தில் தங்கம் சிறிதளவு குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 40 உயர்ந்து, ரூ.12,040க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு விலை ரூ.320 உயர்ந்து, ரூ.96,320 செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.199க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1,99,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : Alert | பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்..!! வாட்ஸ் அப்பில் தீயாய் பரவும் செய்தி..!! உண்மை என்ன..?

English Summary

The price of gold in Chennai today increased by Rs. 320 per sovereign, reaching Rs. 96,320.

RUPA

Next Post

பழைய பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கிறீங்களா? கவனமா இருங்க..! மரணம் நெருங்கி வருகிறது!

Sat Dec 6 , 2025
பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அதன் மறைக்கப்பட்ட தாக்கம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில், நாம் அடிக்கடி பயணத்தின்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குகிறோம் அல்லது பழைய பாட்டில்களைக் கழுவி மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறோம். நீங்களும் இதைச் செய்தால், அதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இந்த பாட்டில்கள் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் அவற்றில் மறைந்திருக்கும் ஆபத்து நமது […]
exercise water 11zon

You May Like