#Flash : தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு… இன்று ஒரே நாளில் ரூ.400 உயர்ந்ததால் அதிர்ச்சி..

indian traditional gold jewellery beautiful 1047188 27813

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.… அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 50 உயர்ந்து, ரூ.9,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : இன்று நாடு தழுவிய பாரத் பந்த்.. 25 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. இந்த சேவைகள் பாதிக்கப்படலாம்…

English Summary

In Chennai today, the price of gold rose by Rs. 400 per sovereign, selling for Rs. 72,480.

RUPA

Next Post

பொய் சொல்பவர்களுக்கு இறந்த பிறகு என்ன தண்டனை கிடைக்கும்..? கருட புராணம் கூறுவது இதோ..

Tue Jul 8 , 2025
கருட புராணம் இந்து மதத்தின் 18 பெரிய புராணங்களில் ஒன்றாகும். இது மனிதனின் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம், யமலோகம், மறுபிறப்பு மற்றும் சீரழிவு ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது. கருட புராணத்தில், தீய செயல்களைச் செய்பவர்களின் ஆன்மாக்கள் இறந்த பிறகு நேரடியாக நரகத்திற்குச் செல்லும் என்று எழுதப்பட்டுள்ளது. கருட புராணம் முக்கியமாக 16 நரகங்களைப் பற்றிப் பேசுகிறது. இந்த 16 நரகங்களில், மக்கள் தங்கள் பாவங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுகிறார்கள். கருட […]
garuda purana

You May Like