Flash : மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

jewels

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.560 உயர்ந்து, ரூ.94,720விற்பனை செய்யப்படுகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ரூ.2000க்கு மேல் உயர்ந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து, 11,840க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு விலை ரூ.560 உயர்ந்து, ரூ.94,720விற்பனை செய்யப்படுகிறது.. நேற்று சற்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து, ரூ.183க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : சிறப்பான ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்க தொழிலாளர் சட்டம்.‌‌..! மத்திய அரசு தகவல்…

English Summary

In Chennai today, the price of gold per sovereign increased by Rs. 560 and is being sold at Rs. 94,720.

RUPA

Next Post

பலி எண்ணிக்கை 96-ஆக உயர்வு.. உலகை உலுக்கிய ஹாங்காங் தீ விபத்துக்கு என்ன காரணம்..? அதிர்ச்சி தகவல்..

Fri Nov 28 , 2025
Death toll rises to 96.. What is the cause of the Hong Kong fire that shook the world..? Shocking information..
hong kong fire2

You May Like