Flash : மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை..! இன்றும் கிடுகிடு உயர்வு..! ஆனால் வெள்ளி விலை ரூ.15,000 குறைவு..!

Gold prices

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440க்கு விற்பனையாகிறது.. எனினும் இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ. 2.45 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த 10 நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்தது.. குறிப்பாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் ரூ.10,000 அளவுக்கு குறைந்தது.. ஆனால் தொடர் சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 10 குறைத்த மத்திய அரசு..!

RUPA

Next Post

மீண்டும் யூடர்ன் போட்ட டிரம்ப்.. போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்கள் நீட்டிப்பதாக அறிவிப்பு..!

Fri Mar 27 , 2026
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக முன்னேறி வருவதாக கூறிய டிரம்ப், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கும் கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்தார். தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்ட அவர், ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் “ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையின்படி, எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்கு, அதாவது கிழக்கு […]
donald trump

You May Like