தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ.86,880க்கு விற்பனை செய்யப்படுகிறது..
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. இதனால் கடந்த வாரம் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்தது.. காலை ரூ.480, மாலை ரூ.560 என இன்று மட்டும் ரூ.1040 உயர்ந்தது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ரூ.10,860க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ,86,880க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து, ரூ.161 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,61,000 விற்பனையாகிறது.
Read More : தீபாவளி அதிரடி ஆஃபர்..!! இந்த கடையில் பாதி விலையில் பட்டுப்புடவைகள் வாங்கலாம்..!! எங்கு இருக்கு தெரியுமா..?



