Flash : ஒரே நாளில் 2 முறை தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் புதிய உச்சம்! நகைப்பிரியர்கள் ஷாக்!

Jewels 2

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்துள்ளது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.92,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. ஓரிரு நாட்கள் மட்டுமே விலை குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்துள்ளது.. இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்த தங்கம் விலை மாலையில் ரூ.55 உயர்ந்து, ரூ.11,580க்கு விற்பனையாகிறது.. அதே போல் இன்று ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.440 உயர்ந்து ரூ..92,640-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

அதே போல் இன்று ஒரே நாளில் வெள்ளி விலையும் 2 முறை உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ரூ. 3 உயர்ந்த வெள்ளி விலை, மாலையும் ரூ. 2 உயர்ந்து ரூ.197க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,97,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.7,000 உயர்ந்து, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Read More : 8-வது சம்பள கமிஷன் எப்போது நடைமுறைக்கு வரும்..? அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய மேஜர் அப்டேட்..! எந்த நேரமும் நடக்கலாம்..

English Summary

The price of gold jewelry in Chennai has increased twice in a single day today.

RUPA

Next Post

தீபாவளி முதல் இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறும்.. லட்சுமி தேவியின் அருளால் பணம் கொட்டும்!

Mon Oct 13 , 2025
வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் பெயர்ச்சி அடையும் போது, ​​அவை சுப யோகங்களை உருவாக்குகின்றன, அவை தனிநபர்கள், சமூகம் மற்றும் உலகத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையின் போது, ​​மிகவும் சுப யோகங்களில் ஒன்று உருவாகப் போகிறது.. அது தான் நவபஞ்ச ராஜ யோகம். அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 7:34 மணிக்கு, இந்த சுப யோகம் ஏற்படும். இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்கு […]
Diwali Astrology 2 2025

You May Like