Flash : இன்றும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு! ஷாக்கில் நகைப்பிரியர்கள்..!

1730197140 4512 2 1

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. குறிப்பாக கடந்த வாரம் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. இந்த வாரத்தில் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த 2 நாட்களாக காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்தது..

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.10,950க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600க்கு விற்பனையாகிறது..

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதே போல் இன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ரூ.165க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,65,000 விற்பனையாகிறது.

Read More : PM Kisan : கவனம்.. இதை செய்யவில்லை எனில் ரூ.2000 பணம் கிடைக்காது; உடனே செக் பண்ணுங்க!

English Summary

Gold prices in Chennai today rose by Rs. 400 per sovereign, selling for Rs. 87,600.

RUPA

Next Post

Big News : விஜய்க்கு அடுத்த ஆப்பு.. பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.. CCTV காட்சிகளையும் பறிமுதல் செய்ய ஆணை!

Sat Oct 4 , 2025
The Madras High Court has ordered the seizure of Vijay's promotional bus and its CCTV footage.
vijay bus court

You May Like