Flash : குட்நியூஸ்..! 2 முறை சரிவு..! ஒரே நாளில் ரூ.1,560 குறைந்த தங்கம் விலை..! குஷியில் நகைப்பிரியர்கள்..!

jewel n

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ரூ.80 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ.1,480 குறைந்தது.. இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில் தற்போது மாலையில் ரூ.185 குறைந்து ரூ.15,465க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1480 குறைந்து ரூ.1,23,720க்கு விற்பனை செய்யப்படுகிறது..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு உயர்ந்து ரூ.3.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : இந்த வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், ரூ.41,478 வட்டி கிடைக்கும்!

RUPA

Next Post

“நிறைய பெண்களுடன் உடலுறவு..” பிரபல நடிகரின் காம லீலைகளை அம்பலப்படுத்திய பெண்..!

Tue Mar 3 , 2026
திரையுலகில் பல உயர்மட்ட வழக்குகளை கையாண்ட ஒரு தனியார் துப்பறிவாளர் தன்யா புரி. இவர் தற்போது, ஒரு முன்னணி பாலிவுட் நடிகரைச் சேர்ந்த திருமணத்தை மீறிய விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த நடிகரின் மனைவியின் மேலாளர், தனது கணவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க தன்னை அணுகியதாகவும், விசாரணையின் போது அந்த நடிகர் பல இளம் நடிகைகளுடன் உறவுகளில் இருந்தது தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார். துப்பறிவாளர் தன்யா புரி, […]
Tanya Puri 1

You May Like