Flash : குட்நியூஸ்..! விலை உயர்வுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

gold price prediction

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.215 குறைந்து ரூ. ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ரூ.1,13, 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. இன்று காலை வெள்ளி விலை ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.3.40 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : “மாதம் 1 லட்சம் பென்ஷன்”..!! மியூச்சுவல் ஃபண்டில் கோடீஸ்வரராக இதுதான் மேஜிக் ஃபார்முலா..!!

RUPA

Next Post

'இது எங்களுடைய வேலை இல்லை': கிரீன்லாந்தை வாங்குவதற்கான ட்ரம்பின் திட்டம் குறித்து புடின் கருத்து..!

Thu Jan 22 , 2026
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற தனது புதிய முயற்சிகள், அமெரிக்கா – டென்மார்க் மற்றும் பிற நாட்டு நாட்டு (NATO) கூட்டாளிகளுடன் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த நிலையில், இதுபற்றி ரஷ்யாவுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புதன்கிழமை இரவு ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் பேசிய புடின், இந்த விவகாரத்திலிருந்து ரஷ்யா […]
putin trump

You May Like