சென்னையில் இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.3,000 குறைந்துள்ளது.. அதே போல் தங்கம் விலையும் சரிந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,380க்கு விற்பனையாகிறது. இதனால் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.99,040க்கு செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்ததால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 3 குறைந்து ரூ.221க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து ரூ. 2,21,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Read More : கட்டுமான பணிகளின் போது இந்த தவறை செய்தால் ரூ.5 லட்சம் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!



