Flash : காலையிலேயே குட்நியூஸ்..! ஒரே நாளில் ரூ.6,000 குறைந்த வெள்ளி விலை..! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

gold silver rate

சென்னையில் இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6000 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. குறிப்பாக நேற்று ஒரே நாளில் ரூ.2560 உயர்ந்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.12,370க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.98,960க்கு செய்யப்படுகிறது.. எனினும் ஆபரணத்தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.6 குறைந்து ரூ. 209க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.6,000 குறைந்து ரூ.2,09,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : தமிழகமே…! வரும் 15-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…!

English Summary

In Chennai today, the price of silver has decreased by Rs. 6000 per kilogram. There is no change in the price of gold jewellery.

RUPA

Next Post

“எங்களுக்கும் அது சொந்தம்..” பாகிஸ்தான் கல்லூரிகளில் சமஸ்கிருதம், மகாபாரதம், பகவத் கீதை பாடங்கள்!

Sat Dec 13 , 2025
For the first time since the partition of India and Pakistan, Sanskrit is set to be taught in a university classroom in Pakistan.
pakistan sanskrit

You May Like