Breaking : குட்நியூஸ்.. ஒரே நாளில் 2 முறை தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

gold jewelery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. ஆனால் இந்த வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை, நேற்று சரிந்தது…

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. அதன்படி நேற்று ரூ.2,400 உயர்ந்தது.

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், தற்போது மாலையிலும் குறைந்துள்ளது.. இன்று அதன்படி இன்று காலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.60 குறைந்த நிலையில் தற்போது மாலையில் ரூ.100 குறைந்து ரூ.11,740க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 480 குறைந்த நிலையில், தற்போது மாலையி ரூ.800 குறைந்து ரூ. .93,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.2,400 அதிகரித்த நிலையில் இன்று ரூ.1,280 குறைந்துள்ளது.. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : தமிழகத்தில் ஒரு வாரம் மழை தான்.. எங்கெல்லாம் தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அலர்ட்..

RUPA

Next Post

உங்கள் கனவில் ஆந்தையைக் கண்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

Fri Nov 14 , 2025
Do you know what happens if you see an owl in your dream?
owl in dream 1

You May Like