Flash : குட்நியூஸ்..! தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றும் அதிரடி குறைவு.. நகை வாங்க சரியான நேரம்..!

gold jewelery

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ2.95 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : சைவ உணவு மட்டும் சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்துகுறையுமா..? ஆக்ஸ்போர்டு ஆய்வில் தெரியவந்த உண்மைகள்!

RUPA

Next Post

அடுத்த பயங்கரம்.. ஊருக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டிய கும்பல்..! பதற வைக்கும் வீடியோ..!

Thu Mar 5 , 2026
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 5 பேர் மீது 6 பேர் கும்பல் பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.. இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை விசாரிக்க சென்ற காவல்துறை வாகனம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.. இந்த சம்பவம் தொடர்பாக 7 […]
manamadurai attack

You May Like