Flash : குட்நியூஸ்.. தொடர் சரிவில் தங்கம் விலை.. 2 நாட்களில் ரூ.3,720 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!

gold jewlery

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையாகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. ஓரிரு நாட்கள் மட்டுமே விலை குறைந்தது.. குறிப்பாக தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3,680 குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 40 குறைந்து, ரூ.11,500க்கு விற்பனையாகிறது.. அதே போல் இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.. இதன் மூலம் 2 நாட்களில் தங்கம் விலை ரூ.3,720 வரை குறைந்துள்ளது.. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.174க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ1,74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : FLASH | சென்னையில் அடுத்த பயங்கரம்..!! 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பெரும் பரபரப்பு..!!

English Summary

Gold prices in Chennai today fell by Rs. 320 per sovereign and are being sold for Rs. 92,000.

RUPA

Next Post

கள்ளக்காதலிக்காக மனைவியை விட்டு சென்ற நாகராஜ்.. அப்புறம் தான் ட்விஸ்ட்டே..! கடைசியில் ஒரு உயிர் போச்சு..

Thu Oct 23 , 2025
The husband who left his wife for a prostitute.. Then there was a twist..! In the end, a life was lost..
sex affair 1

You May Like