கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது..
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,750க்கு விற்பனையாகிறது.. சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
அதே போல் இன்று காலை வெள்ளி விலை குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.272க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.5000 குறைந்து ரூ.2.72 லட்சத்திற்கு விற்பனையாகிறது. இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



