சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ. 92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது..
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ரூ.100 குறைந்து ரூ.11,500க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ. 92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..
அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.173க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,73,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..



