ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்த தங்கம் விலை பிற்பகலில் ரூ.1,440 உயர்ந்தது..
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.13,860க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,040க்கு குறைந்து ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.. அதன்படி இன்று பிற்பகல் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2.55 லட்சத்திற்கு விற்பனையாகிறது..
Read More : Gold Loan: நகைக் கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது?



