Flash : ஹேப்பி நியூஸ்..! தொடர் சரிவில் தங்கம் விலை..! இன்று எவ்வளவு குறைந்துள்ளது..?

gold jewlery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ. 2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : சாமானிய மக்களுக்கு நிம்மதி..! பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

RUPA

Next Post

ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல்..! புதிய உச்ச தலைவருக்கும் எச்சரிக்கை..!

Fri Mar 13 , 2026
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.. ஈரானும் இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருவதுடன் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.. இதனால் மேற்காசீயாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த போர் காரணமாக ஈரானில் மட்டும் சுமார் 1300 பேர் உயிரிழந்துள்ளனர்.. இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்கிய பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் […]
netanyahu 1772446841 1

You May Like