அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை மோன்தா புயலாக மாறியது.. இந்த நிலையில் மோன்தா புயல் தீவிரப் புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இது ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது..
இந்த தீவிரப்புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. மேலும் இந்த புயல் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு கரையை கடக்க உள்ளது.. மோன்தா புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்..
இந்த புயல் காரணமாக இன்றும் சென்னையில் மழை தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது… திருவள்ளூர் மாவட்டத்தில் கனமுதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், குமரி, தென்காசி, நெல்லை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



