FLASH | கொட்டித் தீர்க்கும் கனமழை..!! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு..!!

Rain 2025 1

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே திருப்பத்தூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


முன்னதாக, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கை பட்டியலில் திருப்பத்தூர் மாவட்டமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Read More : கோவை மாணவி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!! அரைகுறை ஆடையுடன் காதலனுக்காக செய்த செயல்..!!

CHELLA

Next Post

மூன்று வேளையும் அரிசி சாதம் உண்பவரா நீங்கள்..? இந்த 5 நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்..!

Thu Nov 6 , 2025
Are you someone who eats rice for all three meals? You are more likely to get these 5 diseases!
how to store reheat leftover rice 2000 e7a768e7ef9c4f8bbd2481ee6f82c856 1

You May Like