Flash : பேய் மழை பொளந்து கட்டும்.. இன்று சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்.. வந்தது புதிய எச்சரிக்கை..!

Chennai Rain 2025

சென்னையில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.


இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூருக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்ச் அலர்ட் தற்போது ரெட் அலர்ட்டாக மாறி உள்ளது.. அதன்படி, சென்னையில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது..

நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : சென்னையை விட்டு விலகாத டிட்வா.. இன்று மிக கனமழை கொட்டி தீர்க்கும்.. மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்..!

RUPA

Next Post

இன்று முதல் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது; அதற்கான காரணம் இதுதான்!

Mon Dec 1 , 2025
ஒவ்வொரு ஆண்டும், ஓய்வூதியம் சரியான நபருக்கே செல்வதை உறுதிப்படுத்த அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது. இந்த வருடாந்திர செயல்முறை அரசாங்க ஓய்வூதிய பதிவுகளை தெளிவாக வைத்திருக்க உதவுகிறது.. மேலும் மோசடி அல்லது தவறான கொடுப்பனவுகளைத் தடுக்க உதவுகிறது. அந்த வகையில் நேற்று, (நவம்பர் 30), தங்கள் ஆயுள் சான்றிதழை இன்னும் சமர்ப்பிக்காத எவருக்கும் இறுதி நாளாகும், மேலும் காலக்கெடுவைத் தவறவிட்டால், அடுத்த மாத […]
pension

You May Like